சிம்மம் ராசி அன்பர்கள் (வருட பலன்) உடல் உபாதைகள் ஏற்படும் காலமாகும். தொழிலை விரிவுபடுத்தவும், தொழிலைப் பெருக்கவும் எண்ணம் மேலோங்கும் அவ்வாறு செய்தால் கடும் நஷ்டம் ஏற்படும். அவமானங்கள் வரும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டமாகும்.கடும் மனஉளைச்சல் ஏற்படும் காலமாகும். உடல் நிலை பாதிக்கும், ஜாதகரின் தாயார் நிலையும் பாதிக்கப்படும். ஆவணி மாதம் பிறந்தவராக இருந்தால் தந்தையாரும் பாதிக்கப்படுவார். சிம்ம இலக்கினம், சிம்ம இராசிக்கு இது சரியான காலமில்லை. அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.சொத்துக்கள் விரயமாகும். திருமணமாகி 4,8,12,16 றருடங்கள் ஆகியிருந்தால் திருமணத்தில் பிரச்சனைகள் அதிகமாகும். பிரிவினை கூட நேரலாம். சிம்மத்தில் குரு, சூரியன் சேர்க்கை உள்ளவர்கள் கடும் மருத்துவச் செலவு செய்யும் படி நேரும். சிம்மத்தில் வக்கிரக் கிரகங்கள் இருந்தால் பெரிய பாதிப்புக்களை தவிர்க்க முடியும். 1978,1979, 1974,, போன்ற வருடங்களில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். கவனம்.
Welcome to Venus Balaaji
- Chennai
- +91 7010298505
- balaajiastro@gmail.com

